சுடச்சுட

  

  சிவகாசிப் பகுதி தொழில்களை பாதுகாப்பதில் தனிக் கவனம் செலுத்துவேன்:அமைச்சர் உறுதி

  By சிவகாசி  |   Published on : 19th June 2016 12:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிவகாசி பகுதியில் உள்ள தொழில்களை பாதுகாப்பதில் தனிக் கவனம் செலுத்துவேன் என தொழில் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.

  திருத்தங்கல் நகராட்சிப் பகுதியில் முதலாவது வார்டு, இரண்டாவது வார்டு மற்றும் கடை வீதிகளில் சனிக்கிழமை மாலை வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து அமைச்சர் பேசியதாவது:

  கடந்த 2011 இல் நடைபெற்ற தேர்தலில் என்னை வெற்றி பெறச்செய்தீர்கள். இதையடுத்து முதல்வரின் ஆசியோடு இந்த தொகுதியில் அரசு கலைக்கல்லூரி நிறுவப்பட்டது உள்ளிட்ட பல வளர்ச்சிப் பணிகளை செய்துள்ளேன். சிவகாசி- விருதுநகர் சாலை, சிவகாசி-சாத்தூர் சாலை, சிவகாசி- ஸ்ரீவில்லிபுத்தூர் சாலை ஆகியன விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன.

  நடந்து முடிந்த தேர்தலில் என்னை சுமார் 14 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்த வாக்காளர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். சிவகாசித் தொகுதியில் மேலும் பல வளர்ச்சிப் பணிகளைச் செய்ய வேண்டியுள்ளது. இ.எஸ்.ஐ.மருத்துவமனை அருகே உள்ள எனது அலுவகத்தில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். கடந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையின் போது, சீனபட்டாசு சட்ட விரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதால் சிவகாசி பட்டாசுத்தொழில் பெரும் நெருக்கடியில் உள்ளது என பட்டாசு ஆலை அதிபர்கள் கூறினர். இது குறித்து நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு முதல்வர் உத்தரவிட்டார். சீனப் பட்டாசுகளை யார் விற்பனை செய்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற முதல்வரின் ஆணையை ஏற்று காவல்துறையினர் செயல்பட்டதால், தமிழகத்தில் சீனபட்டாசு விற்பனை செய்யப்படவில்லை. எனவே இங்குள்ள தொழில்களைப் பாதுகாப்பதில் நான் தனி கவனம் செலுத்துவேன் என்றார் அமைச்சர்.

  அமைச்சருடன் திருத்தங்கல் நகர் மன்றத்தலைவி லட்சுமி கணேசன், துணைத் தலைவர் பொன்சக்திவேல்,சிவகாசி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சுப்பிரமணியம், மாவட்ட அதிமுக வழக்குறைஞர் பிரிவு இணைச் செயலாளர் கணேசன், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் ரமணண் உள்ளிட்டோர் சென்றிருந்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai