சுடச்சுட

  

  சிவகாசி அரசு மருத்துவமனையில் சி.டி. ஸ்கேன் வசதி இல்லாததால் நோயாளிகள் அவதி

  By சிவகாசி,  |   Published on : 19th June 2016 12:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிவகாசி அரசு மருத்துவமனையில் தலைக்காய சிகிச்சைக்கு சி.டி.ஸ்கேன் வசதி இல்லாததால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.

  விருதுநகரில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையிலும், அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையிலும் சி.டி.ஸ்கேன் வசதி உள்ளது. சிவகாசி அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே வசதியும், பிரசவ பயன்பாட்டிற்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் வசதியும் உள்ளன.

  சிவகாசி அரசு மருத்துவமனைக்கு தினசரி, விபத்து அல்லது கீழே விழுந்து அடிபட்டவர்கள் என சுமார் 3 முதல் 5 பேர் வருகிறார்கள். இதில், தலையில் பலத்த அடிபட்ட நோயாளிகளுக்கு, தலையை ஸ்கேன் செய்து பார்த்த பின்னர் தான் சிகிச்சை முறைகளை மேற்கொள்ள இயலும். தலையில் அடிப்பட்டிருந்தால் சி.டி.ஸ்கேன் இருந்தால்தான், காயத்தின் தன்மை எப்படி உள்ளது என கண்டறிய இயலும்.

  ஆனால், சிவகாசி அரசு மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன் வசதி இல்லாததால், நோயாளிகளை விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டிய நிலை உள்ளது. இதனால் காலதாமதம் ஆவதோடு, நோயாளிகள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். எனவே நோயாளிகள் நலன்கருதி சிவகாசி அரசு மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன் வசதியை அரசு செய்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  இது குறித்து அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ஏ.பிரகலாதனிடம் கேட்டபோது அவர் கூறியது: இந்த மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன் வசதி செய்து கொடுக்க வேண்டும் என அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம்.

  சிவகாசியில் சி.டி.ஸ்கேன் வசதி செய்யப்பட்டால், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், வத்திராயிருப்பு அரசு மருத்துவனைக்கு செல்லும் நோயாளிகள் விருதுநகர் செல்லாமல், இங்கு வந்து ஸ்கேன் பார்த்து செல்லாம். தற்போது இங்கிருந்து நோயாளிகள் ஆம்புலன்ஸ் மூலம் விருதுநகர் செல்கிறார்கள்.

  சிவகாசி அரசு மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன் வசதி செய்யப்பட்டால், நோயாளிகள் விருதுநகர் செல்ல வேண்டியதில்லை. இதனால் அரசுக்கு அதிகப்படியான செலவு ஆகாது. விரைவில் அரசு இங்கு சி.டி.ஸ்கேன் வசதி செய்து கொடுக்கும் என்றார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai