சுடச்சுட

  

  மாற்றுத்திறனாளிகளுக்கு செல்லிடப் பேசி பழுது நீக்கும் பயிற்சி

  By சிவகாசி  |   Published on : 19th June 2016 12:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக் மற்றும் விருதுநகர் மாவட்ட புதுவாழ்வு திட்டம் இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான செல்லிடப்பேசி பழுதுநீக்கும் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

  சாத்தூர் அருகே படந்தால் கிராமத்தில் இப்பயிற்சி முகாம் தொடக்க விழா நடைபெற்றது. இதில், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் எம்.நந்தகுமார் தலைமை வகித்தார். புதுவாழ்வுத் திட்ட அலுவலர் எம்.புகழ், புதுவாழ்வுத் திட்டம் குறித்தும், அரசு வழங்கும் சலுகைகள் குறித்தும் பேசினார். மாவட்ட புதுவாழ்வு திட்ட மேலாளர் சி.சண்முகராஜ் பயிற்சி முகாமைத் தொடக்கி வைத்தார். முகாமில் 12 மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சி முகாம் இரண்டு மாதங்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

   

  அருப்புக்கோட்டையில்பலத்த மழை

  அருப்புக்கோட்டையில் சனிக்கிழமை மாலை கன மழை பெய்தது.

  அருப்புக்கோட்டை மற்றும் அதன் புற நகர் பகுதிகளில் சனிக்கிழமை காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் மாலை 4.30 மணிக்கு திடீரென கன மழை பெய்தது. தொடர்ந்து அரை மணி நேரம் மழை பெய்தது. இதனால், சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. பள்ளமான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. குறிப்பாக விருதுநகர் செல்லும் சாலையில் உள்ள திரையரங்கை அடுத்த பகுதியில் சாலையில் தேங்கிய மழை நீரால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்ல நேர்ந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இம்மழையால் அருப்புக்கோட்டை நகர் பகுதிகளில் குளிர்ச்சியான தட்பவெப்பம் நிலவியது.

   

  மோட்டார் சைக்கிள் திருட்டு

  சமயநல்லூர் அருகே வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு போனது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  தேனூர் மேலத்தெருவை சேர்ந்தவர் சுந்தரராஜன் மகன் சுந்தரமூர்த்தி (23). இவர் வியாழக்கிழமை தனது மோட்டார் சைக்கிளை வீட்டு முன்பு நிறுத்தி விட்டு திரும்ப வந்து பார்த்துள்ளார்.

  அப்போது, மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.

  இது குறித்து சுந்தரமூர்த்தி கொடுத்த புகாரின்பேரில் சமயநல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai