சுடச்சுட

  

  மீன் வளர்ப்புக்கு அரசு மானிய நிதியுதவி அளிப்பதாக விருதுநகர் மாவட்ட மீன் வளத்துறை அதிகாரி தெரிவித்தார்.

  சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் மீன் வளர்ப்பு பயிற்சி முகாம் ஜூன் 14 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை நடைபெற்றது. மத்திய மீன்வள மேம்பாட்டுக் கழக நிதியுதவியுடன் கல்லூரியின் நுண்ணுயிரியல் துறை மற்றும் விலங்கியல் துறை இப்பயிற்சி முகாமை நடத்தியது. இதில் மகளிர்சுய உதவிக்குழுவினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முகாம் தொடக்க நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் வ.பாண்டியராஜன் தலைமை வகித்தார். கல்லூரித் தாளாளர் கி.அபிரூபன் முகாமைத் தொடக்கி வைத்தார். விருதுநகர் மாவட்ட மீன்வளத் துறையின் உதவி இயக்குநர் எம்.வி.பிரபாவதி சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், ஆர்வம் மிக்க பயனாளிகளுக்கு மீன் வளர்ப்புக்கு அரசு மானியம் வழங்கும். வீட்டில் உள்ள பெண்கள் வண்ண மீóன் வளர்த்து விற்பனை செய்யலாம். மீன் பண்ணை அமைக்க வேண்டும் என்றால் அதிகாரிகளிடம் அவசியம் ஆலோசனை பெற வேண்டும் என்றார்.

  முகாமில் மீன்களின் வகைகளை கண்டறிதல், தீனியிடுதல், இனப்பெருக்கம், குஞ்சு பராமரிப்பு, நோய் மற்றும் தடுப்பு முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. முகாம் இறுதி நாளில் மதுரையில் இயங்கி வரும் மீன் பண்ணைக்கு நேரடியாக சென்று விளக்கம் அளிக்கப்பட்டது. பேராசிரியர் லூ.இசையரசு வரவேற்றார். இணைப்பேராசிரியர் வீ.தங்கப்பாண்டியன் நன்றி கூறினார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai