சுடச்சுட

    

    ஆணைக்குட்டம் வறண்டது: விருதுநகருக்கு குடிநீர் வழங்குவதில் சிக்கல்

    By விருதுநகர்  |   Published on : 20th June 2016 06:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆணைக்குட்டம் அணை வறண்டு போனதால் விருதுநகர் நகராட்சி பகுதிகளில் தொடர்ந்து குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    விருதுநகர் நகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி வருவது ஆணைக்குட்டம் நீர்த் தேக்கமாகும். தற்போது ஆணைக் குட்டம் அணையை சுற்றியுள்ள 10 கிணறுகள் மற்றும் 2 ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் காரிசேரி நீர்த்தேக்கம் மூலம் நாளொன்றுக்கு 24 லட்சம் லிட்டர் தண்ணீர் விருதுநகருக்கு கொண்டு வரப்படுகிறது. மேலும் தாமிரவருணி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 25 லட்சம் லிட்டர் வரை தண்ணீர் கிடைக்கிறது.

    வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அங்குள்ள கிணறுகளும் ஒரு மாதத்திற்குள் வற்றி விடும் என நகராட்சி ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல் மின்வெட்டு அதிகரித்தால் தாமிரவருணி குடிநீரின் அளவும் குறைவாகவே வரும். தற்போதைய நிலையில் விருதுநகர் நகராட்சி பகுதிகளில் 7 முதல் 10 நாள்களுக்கு ஒருமுறையே தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆணைக்குட்டம் அணை முழுமையாக வறண்டு விட்ட காரணத்தால், 10 நாள்களுக்கு ஒருமுறை வழங்கப்படுவது மேலும் தாமதமாகலாம் என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, தனியார் டிராக்டர்கள் மற்றும் லாரிகள் மூலம் தண்ணீர் விற்பனை நடைபெற்று வருகிறது. ஒரு குடத்திற்கு ரூ.5 முதல் 10 வரை வசூலிக்கின்றனர்.

    இதுகுறித்து நகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது, ஆணைக்குட்டம் நீர்த் தேக்கத்தில் தண்ணீர் வற்றி விட்டது. ஆனால், ஒண்டிப்புலி நீர்த் தேக்கத்தில் சுமார் 35 அடி தண்ணீர் உள்ளது. அதை வைத்தும், தாமிரவருணி குடிநீரை வைத்தும் ஒரு மாதத்திற்கு மேல் குடிநீர் பிரச்னையை சமாளிக்க முடியும் என நம்புகிறோம். அதற்குள் பருவ மழை பெய்து விட்டால், தண்ணீர் பிரச்னையை சமாளிக்க முடியும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai