சுடச்சுட

    

    "இணையதளத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்த வேண்டும்'

    By ஸ்ரீவில்லிபுத்தூர்  |   Published on : 20th June 2016 06:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இணையதளத்தை மாணவர்கள் பயனுள்ள வகையில் பயன்படுத்த வேண்டும் என ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர் ஏ.கலியமூர்த்தி கூறினார்.

    விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் 2016-17-ம் கல்வியாண்டில் பி.டெக். முதலாண்டு மாணவர்களின் பயிற்சி தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை இயக்குநர் எஸ்.சசி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. துணைவேந்தர் ச.சரவணசங்கர் முன்னிலை வகித்தார்.

    கல்வியாண்டுக்கான முதல் அணியை தொடங்கி வைத்து ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர் ஏ.கலியமூர்த்தி சிறப்புரையாற்றினார்.

    அவர் பேசும்போது, மாணவிகளுக்கு கல்விதான் அழகு. 67 சதவீத மாணவர்களும், 33 சதவீத மாணவிகளும் இணையதளத்தைப் பயன்படுத்தி பல்வேறு காரியங்களைப் பார்க்கிறார்கள்.

     இதனை பயனுள்ள வகையில் பயன்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.

    இயக்குநர் எஸ்.சசி ஆனந்த், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் சாதனைகள் குறித்து விளக்கினார். முன்னதாக பதிவாளர் வெ.வாசுதேவன் வரவேற்றார். விழாவில் ஏராளமான பெற்றோர் மற்றும் மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai