சுடச்சுட

    

    தண்ணீர் வற்றியதால் மீன்கள் உயிரிழப்பு

    By ஸ்ரீவில்லிபுத்தூர்  |   Published on : 20th June 2016 06:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கண்மாயில் நீர் வற்றியதால் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மீன்கள் உயிரிழந்தன.

      ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, மம்சாபுரம் அருகே பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான வாழைக்குளம் கண்மாய் உள்ளது.

     இந்தக் கண்மாயால் சுமார் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு விவசாயம் நடைபெறும்.

      கண்மாய் கடந்த டிசம்பர் மாதம் நிரம்பியது. அதனையடுத்து ஜனவரி முதல் 3 மாதங்களுக்கு பொதுப்பணித் துறை ரூ.28,00,100-க்கு இக்கண்மாயை மீன்வளர்ப்பு குத்தகைக்கு விட்டது. குத்தகைக்கு எடுத்தவர்கள் கெழுத்தி, கெண்டை, கட்லா உள்ளிட்ட பல்வேறு மீன்களை கண்மாயில் விட்டுள்ளனர். ஆனால், மழை இல்லாததால் கண்மாய் வற்றத்தொடங்கியது. இதனால் கண்மாயில் உள்ள மீன்கள் உயிரிழந்தன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai