மாயூரநாதசுவாமி கோயிலில் ஆனித் திருவிழா தேரோட்டம்
By ராஜபாளையம் | Published on : 20th June 2016 06:08 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
ராஜபாளையம் மாயூரநாதசுவாமி கோயிலில் ஆனிப் பெருந் திருவிழா தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ராஜபாளையம் பகுதியில் பிரசித்தி பெற்ற மாயூரநாதசுவாமி கோயிலில் ஆனிப் பெருந் திருவிழா ஜூன் 11 இல் கொடியேற்றத்துடன் தொடங்கியது.பல்வேறு சமுதாயங்கள் சார்பில் தினமும் விழா நடத்தப்பட்டு சுவாமி, அம்மன் இரவு அலங்கார வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏழாம் நாளான ஜூன் 17 இரவு 7 மணிக்கு சுவாமி, அம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றது.ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட இரு தேர்களில் சுவாமி அம்மன் எழுந்தருள சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.தங்கபாண்டிய கோயில் நிர்வாக அதிகாரி அறிவழகன் மற்றும் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெற்றது. திங்கள்கிழமை (ஜூன் 20) தீர்த்தவாரியுடன் விழா முடிகிறது. ஜூன் 21-இல் பைரவர் பூஜை நடைபெறுகிறது.