சுடச்சுட

  

  விருதுநகர் மாவட்டத்தில் 27 மதுக் கடைகள் மூடல்

  By விருதுநகர்  |   Published on : 20th June 2016 06:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விருதுநகர் மாவட்டத்தில் இயங்கி வந்த 27 மதுபானக் கடைகள்,  அரசு உத்தரவுப்படி ஞாயிற்றுக்கிழமை முதல் மூடப்பட்டன. 

    விருதுநகர் கச்சேரி சாலையில் உள்ள மதுபானக் கடை, புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள கடை, பேராலி சாலை, முதலிபட்டி, எட்டூர் வட்டம், வெள்ளூர், ஆர்.ஆர்.நகர், சிவகாசி பகுதியில் உள்ள பள்ளபட்டி சாலை முத்துராமலிங்கம் காலனி, அருப்புக்கோட்டை பகுதியில் தோணுகால், வதுவார்பட்டி, காரியாபட்டி அருகே மீனாட்சிபுரம், ராஜபாளையம் ரயில்வே பீடர் சாலை கடை, சேத்தூர், மேலவரகுணராமபுரம், சாத்தூர் நடராஜா தியேட்டர் சாலை கடை, சாத்தூர்-மதுரை சாலை கடை, ஊமத்தம்பட்டி, அயன்பனையடிபட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள கடை, மம்சாபுரம், கொண்டையம்பட்டி, கிருஷ்ணாபுரம், வேப்பங்குளம், திருச்சுழி வட்டாரம் காளையார் கரிசல் குளம், இலுப்பையூர், வீரசோழன், முதலைக் குளம் ஆகிய இடங்களில் உள்ள மது பானக் கடைகள் ஞாயிற்றுக் கிழமை முதல் மூடப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai