Enable Javscript for better performance
அரசு நலத் திட்ட உதவி பெற சீர்மரபினர் விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    அரசு நலத் திட்ட உதவி பெற சீர்மரபினர் விண்ணப்பிக்கலாம்

    By விருதுநகர்  |   Published on : 21st June 2016 08:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சீர்மரபினர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்துள்ள உறுப்பினர்கள், இதுவரையில் பதிவு செய்யாத சீர்மரபினர்கள் தங்களின் பெயர்களை விருதுநகர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் பதிவு செய்து பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் சீர்மரபினருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. விபத்தினால் மரணம் ஏற்பட்டால் ரூ.1 லட்சம், விபத்தினால் ஊனம் ஏற்பட்டால் ஊனத்தின் தன்மைக்கேற்ப ரூ.10,000 முதல் ரூ.1 லட்சம் வரை, இயற்கை மரணம் ரூ.15,000, ஈமச்சடங்கு செலவினம் ரூ.2000, பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 படித்து வரும் பெண் குழந்தைகளுக்கு ரூ.1000, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.1000, பிளஸ் 2 படித்து வரும் பெண் குழந்தைகள் மற்றும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.1500, முறையான பட்டப்படிப்புக்கு ரூ.1500, மாணவர் இல்ல வசதியுடன் முறையான பட்டப்படிப்பிற்கு ரூ.1750, முறையான பட்ட மேற்படிப்பிற்கு ரூ.4000, மாணவர் இல்ல வசதியுடன் முறையான பட்ட மேற்படிப்பிற்கு ரூ.5000, தொழிற்கல்வி பட்டப்படிப்புக்கு ரூ.4000, மாணவர் இல்ல வசதியுடன் தொழிற்கல்வி பட்டப்படிப்புக்கு ரூ.6000, தொழிற்கல்வி பட்டமேற்படிப்புக்கு ரூ.6000, மாணவர் இல்ல வசதியுடன் தொழிற்கல்வி பட்ட மேற் படிப்புக்கு ரூ. 8000, ஐ.டி.ஐ அல்லது தொழிற்பயிற்சி படிப்புக்கு ரூ.1000, மாணவர் இல்ல வசதியுடன் ஐ.டி.ஐ அல்லது தொழிற்பயிற்சிப்படிப்புக்கு ரூ.1200, திருமண உதவித்தொகை ரூ.2000, மகப்பேறு மாதம் ஒன்றுக்கு ரூ.1000 வீதம் 6 மாதங்களுக்கு ரூ.6,000, முதியோர் ஓய்வூதியம் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும். இந்த உதவி தொகை பெற சம்பந்தப்பட்ட அலுவலகத்தை அனுகி விண்ணப்பிக்கலாம் என பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை தெரிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai