சுடச்சுட

  

  ராஜபாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் 60க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

   செவ்வாய்க்கிழமை (ஜூன் 21) சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. யோகா தினத்தை பற்றியும், யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகளை வெளிப்படுத்தும் விதமாகவும் ராஜபாளையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பதஞ்சலி யோகா மையம் சார்பில் பயிற்சியாளர் நீராத்திலிங்கம் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 60க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

   நிகழ்ச்சிக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் பள்ளி மாணவ மாணவிகள் பத்மாசனம், பத்மகோணாசனம், ஏகபாத கந்தாசனம், அர்த்த பாவயாசனம் உள்ளிட்ட 20 வகையான யோகாசனங்களை செய்து காண்பித்தனர். பின்னர் 5 மாணவ மாணவிகள் நடத்திய இசை யோகா நிகழ்ச்சியில், தொடர்ந்து 6 நிமிடங்கள் பின்னணி இசைக்கு ஏற்ப 40க்கும் மேற்பட்ட யோகாசனங்களை செய்து காண்பித்து பெற்றோர்களிடமும், சிறப்பு விருந்தினர்களிடமும் பாராட்டுப் பெற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai