சுடச்சுட

  

  சிவகாசி தொகுதி வளர்ச்சிக்கு பாடுபடுவேன்: அமைச்சர்

  By சிவகாசி  |   Published on : 21st June 2016 07:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிவகாசி நகராட்சி அண்ணாநகர், பராசக்தி காலனி, முஸ்லிம் தெரு, தேவமார்தெரு, புதுத்தெரு, நடராஜா காலனி, பாரதி நகர், பேருந்துநிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை அமைச்சர் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசியதாவது:

   கடந்த 5ஆண்டுகளில் இந்த தொகுதியில் பல வளர்ச்சிப் பணிகளை முதல்வர்ஆசியுடன் செய்துள்ளேன். சாலை விரிவாக்கம், ஆழ்துளை கிணறு அமைத்தல் உள்ளிட்டவைகளை செய்து கொடுப்பேன். தொகுதியின் வளர்ச்சிக்குத் தொடர்ந்து பாடுபடுவேன்.

   மக்கள் நலனை கருத்தில் கொண்டு முதல்வர் மேலும் பல திட்டங்களை செயல்படுத்த உள்ளார். விரைவில் உள்ளாட்சி தேர்தல் வர உள்ளது. உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக மகத்தான வெற்றி பெறும் என்றார் அமைச்சர். ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சுப்பிரமணியம், நகர் மன்றத் தலைவர் வெ.க.கதிரவன், துணைத் தலைவர் கே.ஏ.ஏ.அசன்பத்ருதீன் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai