Enable Javscript for better performance
துப்புரவு தொழிலாளர்கள் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    நிலுவையிலுள்ள ஊதியத்தை வழங்கக் கோரி அருப்புக்கோட்டை நகராட்சியின் துப்புரவுத் தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திங்கள்கிழமை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

     அருப்புக்கோட்டை நகராட்சியில் பணிபுரியும் நூற்றுக்கும் மேற்பட்ட துப்புரவுத் தொழிலாளர்களுக்கு மே மாதத்துக்கான ஊதியம் இது வரை வழங்கப்படவில்லையாம்.

     இதையடுத்து  தொழிலாளர்கள் நகராட்சி அலுவலக வளாகம் முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நகராட்சி ஆணையர் கோ.முத்துவெங்கடேசன் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஊதியத்தை விரைவில் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார்.

     இதையடுத்து போராட்டத்தைக் கைவிட்டு தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai