சுடச்சுட

  

  பாதாள சாக்கடை திட்டத்துக்கு கூடுதல் தொகை வசூலிப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

  By விருதுநகர்  |   Published on : 21st June 2016 08:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விருதுநகரில் பாதாள சாக்கடை திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள வீடுகளுக்கு வரைமுறை கட்டணம் மற்றும் அபராதத் தொகை வசூலிப்பதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

  விருதுநகர் நகராட்சி பகுதியில் பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள் 2007-இல் தொடங்கப்பட்டது. நகரின் கிழக்குப் பகுதியில் பணிகள் இன்னும் முழுமையாக  நிறைவடையவில்லை. இந்நிலையில், பல வீடுகளில் பாதாள சாக்கடை இணைப்பு ஏற்கெனவே கொடுக்கப்பட்டுள்ளது.

   அந்த வீடுகளுக்கு, அபராத தொகையுடன் வரைமுறை கட்டணம்  ரூ.8 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை விதித்து நகராட்சி நோட்டீஸ் வழங்கியுள்ளது. இதனை கண்டித்தும், அத்தொகையை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செயலாளர் பி.ராஜா தலைமையில் பாத்திமாநகர் பொது மக்கள் திங்கள்கிழமை நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர், நகராட்சி மேலாளர் ராமதிலகத்திடம் மனு அளித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai