சுடச்சுட

  

  விருதுநகர் ரயில்வே மேம்பாலப் பணிகளில் மீண்டும் தேக்கநிலை

  By விருதுநகர்  |   Published on : 21st June 2016 07:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடரப்படாமல் மீண்டும் தேக்கநிலையை அடைந்துள்ளன.

  விருதுநகரின் மையப்பகுதியில் உள்ள ராமமூர்த்தி சாலையில் ரயில்வே கடவு உள்ளது. இப்பகுதியில் நாள்தோறும் 70 க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்று வந்தன. அடிக்கடி கடவு மூடப்பட்டு, மாணவர்கள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர். அப்பகுதியில் மேம்பாலம் அமைக்க பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.

  இந்நிலையில், மேம்பாலம் கட்ட, 2008-இல் அப்போதைய அரசு ரூ.36 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. சேவை சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த சிலர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இதனால், பணி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. அடுத்தடுத்து பல்வேறு வழக்குகளால் தாமதமான பணிகளுக்கு பிப். 24-இல் உயர்நீதிமன்றம் முற்றுப்புள்ளை வைத்தது. ராமமூர்த்தி சாலையில் விரைவில் மேம்பாலம் கட்ட வேண்டும் என அன்று மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.

  இதையடுத்து, கடந்த மார்ச் 4 இல் மேம்பாலம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.  மார்ச் 19 ஆம் தேதி நள்ளிரவு முதல் ராமமூர்த்தி சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு வாகனங்கள் மாற்றுப் பாதையில் சென்று வருகின்றன. ரயில்வே துறை அதிகாரிகள் ராமமூர்த்தி சாலை மேம்பால பணிக்காக அப்பகுதியை அளந்தனர். இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டதால் மேம்பாலம் அமைக்கும் பணி தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், தேர்தல் முடிந்த பிறகும் பணிகள் தொடங்கவில்லை. மேம்பாலத்துக்கு ராமமூர்த்தி சாலையின் நடுவே பெரிய தூண்கள் அமைக்க வேண்டும். தூண்களுக்கு குழி தோண்டும் இடங்களில் பாதாள சாக்கடை திட்ட குழாய்கள் மற்றும் குடிநீர் செல்லும் குழாய்கள் உள்ளன. இவற்றை மாற்றி அமைக்க நகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. ஆனாலும், அதற்கான பணிகள் நடைபெற வில்லை.

  பாலப் பணிகளுக்காக மாற்றுப் பாதை வழியாக போக்குவரத்து நடைபெறுவதால் பொதுமக்கள் சுற்றிச் சென்று வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன் கருதி மேம்பாலப் பணியை விரைந்து முடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai