சிவகாசியில் தூய்மை இந்தியா திட்டத்தை நிறைவேற்ற கழிவுநீர் குழாய்களை சேதப்படுத்தியதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
By சிவகாசி | Published on : 22nd June 2016 08:02 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
சிவகாசி நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தை நிறைவேற்ற கழிவுநீர் குழாய்களை சேதப்படுத்தியதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சிவகாசி நகராட்சி 30ஆவது வார்டில் தூய்மை இந்தியா திட்டத்தில் மானியத்துடன் கழிப்பறை கட்டும் திட்டத்தை நிறைவேற்றவதற்காக நகராட்சி ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை பி.கே.எஸ்.தெருவில் உள்ள சில வீடுகளில் கழிவு வெளியேற்றும் குழாய்கள், குடிநீர் குழாய்கள், மழைநீர் சேமிப்பு குழாய்களை சேதப்படுத்தினார்களாம்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த நகராட்சி பொறியாளர் ரவீந்திரன், நகர் மன்றத் தலைவர் வெ.க.கதிரவன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில், உடைக்கப்பட்ட குழாய்களை சீரமைத்து தருவதாக அதிகாரிகள் கூறியதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டுவிட்டு கலைந்து சென்றனர்.