சுடச்சுட

  

  சிவகாசியில் உள்ள கல்லூரிகளில் செவ்வாய்க்கிழமை சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது.

    ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தாளாளர் ஏ.பி.செல்வராஜன் தலைமை வகித்தார்.

   ஈஷா யோகா மைய பயிற்சியாளர்கள் முத்துசெல்வி, கலைராஜன், காந்திமதி ஆகியோர் யோகா பயிற்சி அளித்தனர். நிகழ்ச்சியில் முதல்வர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, துணை முதல்வர்கள் முத்துலட்சுமி, பாலமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கணினி அறிவியல் துறைத் தலைவி பிரியா செய்திருந்தார்.

    எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முதல்வர் த.சசிரேகா தலைமை வகித்து,யோகாவால் ஏற்படும் நன்மைகள் குறித்து பேசினார். ஏற்பாட்டை திட்ட அலுவலர்கள் பொ.தெரசிட்டா மேரி சாந்தி, ந.பானுமதி ஆகியோர் செய்திருந்தனர்.

    அய்யநாடார்ஜானகி அம்மாள் கல்லூரியில் உடற்கல்வித் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் வ.பாண்டியராஜன் யோகா குறித்து பேசினார். உடற்கல்வித் துறை பேராசிரியர்கள் யோகா பயிற்சிஅளித்தனர். இதனையொட்டி கல்லூரி இணையதளத்தில் நடத்தப்பட்ட கட்டுரைப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    தேசிய மாணவர் படை தலைவர் டென்சிங்பாலையா நன்றி கூறினார்.ஏற்பாட்டை உடற்கல்வித் துறை இயக்குநர் ஜி.பாலஜிவசிங் செய்திருந்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai