சுடச்சுட

  

  விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள பிளாஸ்டிக் மறு சுழற்சி செய்யும் ஆலையில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

    ஸ்ரீவில்லிபுத்தூர் என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் பொன்ராஜ். இவர், ராஜபாளையம் மருதுநகரில் பிளாஸ்டிக் மறு சுழற்சி செய்யும் ஆலை நடத்தி வருகிறார். பல்வேறு இடங்களில் இருந்து பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் பிளாஸ்டிக் கயிறுகளை வாங்கி வந்து, அதை மறு சுழற்சி செய்து குடம் தயாரிக்கும் ஆலைகளுக்கு விற்பனை செய்து வந்தார்.

    இவர், திங்கள்கிழமை இரவு வழக்கம் போல் ஆலையை பூட்டி விட்டு சென்று விட்டார். இதையடுத்து செவ்வாய்க்கிழமை காலை ஆலையின் வளாகத்தில் இருந்த பிளாஸ்டிக் மூலப் பொருள்களில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் வந்த ராஜபாளையம் தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    இந்த தீ விபத்தில் பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பிளாஸ்டிக் மூலப் பொருள்கள் முற்றிலும் எரிந்து சேதமானது. இதுகுறித்து வடக்கு காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai