சுடச்சுட

  

  மது போதையில் பெண்ணை அரிவாளால் வெட்டியவர் மீது வழக்குப்பதிவு

  By ராஜபாளையம்  |   Published on : 22nd June 2016 07:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராஜபாளையம் அருகே திங்கள்கிழமை மது போதையில் பெண்ணை அரிவாளால் வெட்டியவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து தேடிவருகின்றனர்.

  ராஜபாளையம் அருகே உள்ள சுந்தர்ராஜபுரத்தைச் சேர்ந்தவர் தர்மபுத்திரன் இவர், திங்கள்கிழமை மதுகுடித்துவிட்டு சாலையில் தள்ளாடியபடி நடந்துவந்துள்ளார்.இதைகண்ட பக்கத்துவீட்டில் வசிக்கும் ஈஸ்வரன் மனைவி குருவம்மாள் சாலையில் விளையாடிய தனது இரு குழந்தைகளை வீட்டுக்குள் அழைத்து வந்தார்.

  இதனால் ஆத்திரமடைந்த தர்மபுத்திரனின் மனைவி ஜோதி, குருவம்மாளிடம் தகராறு செய்து அவரை தாக்கினாராம். அப்போது தர்மபுத்திரன் குருவம்மாளை அரிவாளால் வெட்டி விட்டு தப்பிவிட்டாராம். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த சேத்தூர் ஊரக போலீஸார் ஜோதியை கைதுசெய்தனர். தப்பிச்சென்ற தர்மபுத்திரனை தேடிவருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai