சுடச்சுட

  

  மனைவியை கடத்திச் சென்றதாக காவல்நிலையத்தில் இளைஞர் புகார்

  By ஸ்ரீவில்லிபுத்தூர்  |   Published on : 22nd June 2016 07:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காதலித்து திருமணம் செய்து கொண்டதால், தனது மனைவியை அவரது பெற்றோர் கடத்திச் சென்று விட்டதாக கணவர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர், மம்சாபுரம்-இடையன்குளத்தைச் சேர்ந்தவர் ராமர் மகன் அழகுசுந்தரம் (23). இவர், தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இதே கல்லூரியில் மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகா, ரெங்கபாளையத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகள் சுபாஷிணி என்பவர் செவிலியர் படிப்பு படித்து வந்துள்ளார்.

    சுபாஷிணியின் பெற்றோர் இடையன்குளம் அருகேயுள்ள எம்.பி.கே.புதுப்பட்டியில் தங்கி, இங்குள்ள மில்லில் வேலை செய்து வந்தனர். இதனால், அழகுசுந்தரத்திற்கும் சுபாஷிணிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. வெவ்வேறு ஜாதியை சேர்ந்த இருவரும் கடந்த ஓராண்டுக்கு முன்னர் தென்காசி அருகேயுள்ள வீரசிகாமணி என்ற ஊரில் சார்-பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்துள்ளனர். இதையடுத்து சுபாஷிணியின் பெற்றோர் வீட்டைக் காலி செய்து விட்டு தங்களது சொந்த ஊருக்குச் சென்றவிட்டனர். சுபாஷிணி, இடையன்குளத்தில் அழகுசுந்தரத்துடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

     இந்நிலையில், திங்கள்கிழமை சுபாஷிணியின் தந்தை ரவிச்சந்திரன், தாய் ராஜேஸ்வரி மற்றும் 7 பேர் இடையன்குளம் வந்து, பெட்டிக் கடையில் நின்று கொண்டிருந்த சுபாஷிணியை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று விட்டார்களாம். இதனைத் தடுக்க வந்த அழகுசுந்தரத்தின் தாயை சாதியைக் கூறி இழிவாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்தார்களாம்.

    இது குறித்து மம்சாபுரம் காவல் நிலையத்தில் அழகுசுந்தரம் செவ்வாய்க்கிழமை புகார் செய்தார். அதன்பேரில் காவல் ஆய்வாளர் ஜே.மகேஷ்குமார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai