Enable Javscript for better performance
ராஜபாளையம் அருகே முதியவரை காரில் கடத்திச் சென்று ரூ. 1.40 லட்சம் கொள்ளை - Dinamani

சுடச்சுட

    

    ராஜபாளையம் அருகே முதியவரை காரில் கடத்திச் சென்று ரூ. 1.40 லட்சம் கொள்ளை

    By ராஜபாளையம்  |   Published on : 22nd June 2016 07:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராஜபாளையம் அருகே முதியவரை காரில் கடத்திச் சென்று ரூ. 1.40 லட்சத்தை கொள்ளையடித்த கும்பலை போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து தேடிவருகின்றனர்.

       ராஜபாளையம் அருகேயுள்ள மாங்குடியைச் சேர்ந்தவர் காளிரத்தினம் (50). இவர்,வாழவந்தாள்புரத்தைச் சேர்ந்த கருப்பையா என்பவருக்கு பணம் கொடுப்பதற்காக திங்கள்கிழமை பைக்கில் ரூ.1.40 லட்சத்தை எடுத்துச் சென்றார்.

       அப்போது, பஞ்சம்பட்டி அருகே காரில் வந்த 8 பேர் கொண்ட ஒரு கும்பல் காளிரத்தினத்தை வழிமறித்து காரில் கடத்தி சென்றது. பின்னர், பணத்தை பிடுங்கிக் கொண்டு திருநெல்வேலி மாவட்டம் உள்ளார் அருகே பாலத்துக்கடியில் காளிரத்தினத்தை அந்த கும்பல் கீழே தள்ளிவிட்டுச் சென்றனர்.  இதுகுறித்து காளிரத்தினம் தளவாய்புரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai