சுடச்சுட

    

    விருதுநகர் சாலை விபத்தில் தொழிலாளி இறந்த வழக்கில் திடீர் திருப்பம்: கொலையா என விசாரணை?

    By விருதுநகர்  |   Published on : 22nd June 2016 02:30 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகர் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் தொழிலாளி உயிரிழந்த வழக்கில் இருவர் அருப்புக்கோட்டை நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்தனர். மேலும், இறந்த தொழிலாளியை கார் ஏற்றி கொலை செய்தனரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

      விருதுநகர் கோவிந்தநல்லூரைச் சேர்ந்தவர் கூடலிங்கம், கூலித் தொழிலாளியான இவர், தனது மனைவி மாரித்தாயுடன் ஜூன்16 ஆம் தேதி தாதம்பட்டியிலிருந்து இரு சக்கர வாகனத்தில் வந்தார். அப்போது ஒண்டிப்புலி நாயக்கனூர் சாலையில் எதிரே வந்த கார், இரு சக்கர வாகனம் மீது மோதியதில் கூடலிங்கம் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். காயமடைந்த மாரித்தாய், சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.  இதுகுறித்து சூலக்கரை போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வந்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய காரை கோவிந்தநல்லூரை சேர்ந்த பாலமுருகன் என்பவர் சிவகாசியிலிருந்து வாங்கிக் கொண்டு ஓட்டிவந்ததாகவும் கூறப்படுகிறது.

      பாலமுருகன் சகோதரர் லிங்கராஜூவிற்கும் கூடலிங்கத்திற்கும் ஏற்கனவே இடத்தகராறு இருந்துள்ளது. இதனால் ஏற்பட்ட தகராறில் கூடலிங்கம் தாக்கியதில் லிங்கராஜூ காயமடைந்தார். இது தொடர்பான வழக்கு சூலக்கரை காவல்நிலையத்தில் நிலுவையில் உள்ளது.

      இந்நிலையில், பாலமுருகன், லிங்கராஜூ இருவரும் அருப்புக்கோட்டை நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்தனர். முன்விரோதம் காரணமாக கூடலிங்கத்தை காரை ஏற்றி கொலை செய்திருக்கலாம் என சந்தேகிப்பதால் இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai