Enable Javscript for better performance
விருதுநகர் மாவட்டத்தில் 3.8 லட்சம் மெட்ரிக் டன் உணவு தாணியங்கள் உற்பத்தி இலக்கு- Dinamani

சுடச்சுட

    

    விருதுநகர் மாவட்டத்தில் 3.8 லட்சம் மெட்ரிக் டன் உணவு தாணியங்கள் உற்பத்தி இலக்கு

    By விருதுநகர்  |   Published on : 22nd June 2016 08:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகர் மாவட்டத்தில் நிகழாண்டு 3.8 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்) செல்வம் தெரிவித்தார்.

    இது குறித்து அவர் மேலும் கூறியது: நிகழாண்டு தரிசு நில மேம்பாடு திட்டத்தில் பரப்பளவை அதிகரிக்க பல்வேறு கூடுதல் விவசாயம் மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் படி, பயிர் சாகுபடி செய்ய கூடிய நிலங்களின் தன்மையை இலவசமாக பரிசோசனை செய்து விவசாயிகளுக்கு தெரிவிக்க உள்ளது. கடந்த ஆண்டு இயந்திர நெல் நடவுக்கு ரூ.3,000 மானியமாக வழங்கப்பட்டது. இந்த ஆண்டு இயந்திர நடவுக்கு ரூ.5,000 மானியம் வழங்க உள்ளது. அதேபோல் இந்த ஆண்டு 40 ஆயிரம் ஹெக்டேரில் கம்பு, கேழ்வரகு, சோளம், குதிரைவாலி, மக்காச்சோளம் போன்ற பயிர்களும், 25 ஆயிரம் ஹெக்டேரில் நெல் பயிரும், 13 ஆயிரம் ஹெக்டேரில் பருத்தியும், ஒரு லட்சத்து 520 ஹெக்டேர் பரப்பளவில் எண்ணெய் வித்து உள்பட பல்வேறு விவசாயம் செய்யப்பட உள்ளது.

    இதன் காரணமாக 3.8 லட்சம் மெட்ரிக் டன் உணவு தாணியங்கள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 2 ஆயிரம் மெட்ரிக் டன் கூடுதல் உணவு உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai