சுடச்சுட

  

  அருப்புக்கோட்டை  அருகே ரூ. 2,000 லஞ்சம் வாங்கிய காவல் சார்பு-ஆய்வாளர் கைது

  By அருப்புக்கோட்டை  |   Published on : 23rd June 2016 07:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அருப்புக்கோட்டை அருகே கொலை மிரட்டல் வழக்கில் சம்பந்தப்பட்டவரை கைது செய்யாமல் இருக்க ரூ. 2,000 லஞ்சம் வாங்கிய காவல் சார்பு- ஆய்வாளர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.

  நரிக்குடி பகுதி மறையூரைச் சேர்ந்தவர் போஸ் (50). இவர், மறையூரைச் சேர்ந்த அழகர் மற்றும் அவருடைய மகன்கள் கண்ணன்,கோவிந்தராஜ் மூவரும் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அ.முக்குளம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இப்புகாரை சார்பு-ஆய்வாளர் ராமகிருஷ்ணன் விசாரணை நடத்தி வந்தார். இந்த வழக்கில் மூவரையும் கைது செய்யாமல் இருக்க அழகரிடம், சார்பு-ஆய்வாளர் ராமகிருஷ்ணன் ரூ. 2,000 லஞ்சம் கேட்டுள்ளார். மேலும், அருப்புக்கோட்டையில் தான் குறிப்பிடும் இடத்திற்கு வந்து பணத்தைத் தருமாறு கூறியுள்ளார். இதுதொடர்பாக, லஞ்ச ஒழிப்புத் துறையில் அழகர் புகார் அளித்தார்.

  இந்நிலையில், புதன்கிழமை பிற்பகல் பழைய பேருந்து நிலையத்தின் வெளியே உள்ள ஒரு மருந்துக்கடை அருகே ராமகிருஷ்ணனிடம் லஞ்சப் பணத்தை அழகர் தந்தார். அப்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி. பாண்டியராஜன் தலைமையிலான போலீஸார் ராமகிருஷ்ணனை கைது செய்தனர். இதுதொடர்பாக ராமகிருஷ்ணன் மீது வழக்குத் தொடர்ந்த லஞ்ச ஒழிப்புப் போலீஸார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai