சுடச்சுட

  

  சிவகாசியில் ஜூன் 25இல் பட்டாசு தயாரிப்பு பாதுகாப்பு கருத்தரங்கம்

  By சிவகாசி  |   Published on : 23rd June 2016 07:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிவகாசியில் ஜூன் 25ஆம் தேதி பட்டாசு தயாரிப்பு பாதுகாப்பு கருத்தரங்கம் நடைபெறவுள்ளதாக ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி தாளாளர் ஏ.பி.செல்வராஜன் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

   சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் பல்கலைக்கழக மானிய நிதிக்குழு உதவியுடன், டிப்ளமோ இன் மேனுபாச்சரிங்  ஆப் மேச்சஸ் அன்டு பயர் ஒர்க்ஸ் என்ற ஓர் ஆண்டு பட்டயப் படிப்பு சமுதாயக் கல்லூரி மூலம் நடத்தப்பட்டு வருகிறது.

     இதன் அடிப்படையில் ஜூன் 25, 26ஆம் தேதிகளில் தீப்பெட்டி மற்றும் பட்டாசுத் தயாரிப்பில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் என்ற தலைப்பிலான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

     இதில், பட்டாசு தயாரிப்பில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து, விருதுநகர் மாவட்ட நடமாடும் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குநர் கே.மனேகரன் சிறப்புரையாற்றுகிறார்.

    மேலும், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் பட்டாசு தயாரிக்க பயன்படும் வேதியல் பொருள்கள் மற்றும் அதன் தன்மைகள் குறித்து பேச உள்ளனர்.

   இது குறித்த மேலும் விபரங்களுக்கு 05462-232648 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். ஏற்பாடுகளை முதல்வர் சீ.கிருஷ்ணமூர்த்தி மற்றும் பேராசிரியர்கள் செய்து வருகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai