சுடச்சுட

    

    சென்னையில் செப்.12 இல் சாலை ஆய்வாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

    By விருதுநகர்  |   Published on : 23rd June 2016 07:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெடுஞ்சாலைத் துறை சாலை ஆய்வாளர்கள் சங்கம் சார்பில் செப். 12ஆம் தேதி சென்னையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக அச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் மாரிமுத்து தெரிவித்துள்ளார்.

      இதுகுறித்து புதன்கிழமை அவர் மேலும் கூறியது:  சாலை ஆய்வாளர்களின் பரிந்துரையின்றி சாலைகளில் தேவையற்ற பொருள்கள் சேர்க்கப்படுவதை தவிர்க்க வேண்டும்.

     சாலை ஆய்வாளர் நிலை1, நிலை 2 பணியிடத்தை ஒருங்கிணைத்து சாலை ஆய்வாளர் நிலை என பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும். தர ஊதியம் ரூ.2,600 வழங்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும். சாலைப் பராமரிப்பு பணிகளை தனியாருக்கு வழங்காமல் அரசே நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி செப்.12ஆம் தேதி சென்னையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளோம்   என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai