சுடச்சுட

  

  வாறுகாலில் தேங்கியுள்ள கழிவுநீரால் கொசுக்கள் உற்பத்தி: நோய் பரவுவதாக பொது மக்கள் புகார்

  By விருதுநகர்  |   Published on : 23rd June 2016 07:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விருதுநகர் மாத்திநாயக்கன்பட்டி சாலையில் வாறுகால் சுத்தம் செய்யப்படாததால்  கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால் உருவாகும் கொசுக்களால் நோய் பரவுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    விருதுநகர் நகராட்சி 32ஆவது வார்டுக்கு உள்பட்டது மாத்திநாயக்கன்பட்டி சாலை. இங்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் பிரதான வாறுகால் உள்ளது. இதில், நகரின் வடக்கு பகுதியில் உள்ள கழிவுநீர் முழுவதும் இந்த பிரதான வாறுகாலுக்கு வந்தடைகிறது. மேலும், குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவு பொருள்களும் கொட்டப்படுவதால் கழிவுநீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்கிறது.

    இதனை நகராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்யவதில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் உருவாகும் கொசுக்கள் கடிப்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நோய் பரவுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் கூறியது: கடந்த பல மாதங்களாக இந்த வாறுகாலை சுத்தம் செய்ய நகராட்சி ஊழியர்கள் வருவதில்லை. பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. கழிவு நீர் தேங்கி நிற்பதால், சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. மேலும், கொசுக்கள் கடிப்பதால், 20க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, வாறுகாலில் தேங்கியுள்ள கழிவு நீரை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai