சுடச்சுட

  

  விசைத்தறி தொழிலாளர்கள், உற்பத்தியாளர்கள் பேச்சுவார்த்தை ஜூன் 28க்கு ஒத்திவைப்பு

  By ராஜபாளையம்  |   Published on : 23rd June 2016 07:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சத்திரப்பட்டி பகுதியில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் விசைத்தறி தொழிலாளர்களுக்கும் உற்பத்தியாளர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை ஜூன் 28ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    சத்திரப்பட்டி மற்றும் சுற்றுப் பகுதியில் விசைத் தறி தொழிலாளர்கள் கூலி உயர்வை வலியுறுத்தி கடந்த 7 நாள்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதை சார்ந்துள்ள, சைசிங், வார்ப்பிங் நிறுவனங்களும் தற்போது மூடப்படும் நிலையில் உள்ளது.

   இந்த வேலைநிறுத்தத்தால் ரூ. 2 கோடி வரை உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் ராஜபாளையம் தொழிலாளர்கள் நல அலுவலகத்தில் தொழிலாளர்கள் நல இணைஆணையாளர் சரவணன் தலைமையில் செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், தொழிலாளர்கள், உற்பத்தியாளர்களிடையே ஒரு மித்த முடிவு ஏற்படாததால் பேச்சுவார்த்தை ஜூன் 28ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    வேலைநிறுத்தத்தால் உற்பத்தியாளர்களும்,ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் பாதிக்கப்படுவார்கள் என்பதால், சுமுக தீர்வுகான அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai