சுடச்சுட

  

  வெம்பக்கோட்டை பகுதியில் 80 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

  By விருதுநகர்  |   Published on : 23rd June 2016 07:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை, கே. லட்சுமியாபுரத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 80 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் சி. முத்துக்குமரன் வழங்கினார்.

    வெம்பக்கோட்டை வட்டம், கங்கர்செவல் ஊராட்சி கே.லட்சுமியாபுரத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. இதில், 9 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் உத்தரவு, 24 பேருக்கு பட்டா மாறுதல் (உட்பிரிவு) உத்தரவு, 5 பேருக்கு முதியோர் உதவித்தொகை, 5 பேருக்கு ஆதரவற்ற விதவை உதவித்தொகை, 5 பேருக்கு ஊனமுற்றோர் உதவித்தொகை, 26 பேருக்கு புதிய குடும்ப அட்டைகள், 6 பேருக்கு பட்டா மாறுதல் (முழுப்புலம்) என மொத்தம் 80 பேருக்கு அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துக்குமரன் வழங்கினார்.

    அப்போது அவர் பேசியது: தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் வருவாய்த் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் அனைத்தும் கிராமப்புற ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் உள்ளது. இந்த முகாமிற்காக ஒரு மாதத்திற்கு முன்பு, துணை ஆட்சியரால் மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி தகுதியான நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.  

    மேலும், இந்த முகாமில் பெறப்பட்ட 100 மனுக்கள் சம்மந்தப்பட்ட துறைகள் மூலம் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியான மனுக்களுக்கு ஜூன் 29 ஆம் தேதி   தீர்வு காணப்படும் என்றார் அவர்.

    நிகழ்ச்சியில், உதவி ஆட்சியர் (முத்திரைத்தாள்) சுந்தரமூர்த்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் ராஜாராமன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தனலிங்கம், உதவி இயக்குநர் (ஆயம்) சங்கரநாராயணன், வட்டார போக்குவரத்து அலுவலர் சோமசுந்தரம், வட்டாட்சியர் லோகநாதன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai