Enable Javscript for better performance
அரிமா சங்க நிர்வாகிகள் பதவியேற்பு- Dinamani

சுடச்சுட

    

    சிவகாசியில் புதன்கிழமை அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது.

      நிகழ்ச்சிக்கு அச்சங்கத் தலைவர் என்.கனகசபேசன் தலைமை வகித்தார். செயலர் டி.இம்பாலா ஆண்டறிக்கை வாசித்தார். புதிய தலைவர் ஏ.நாகராஜன், துணைத் தலைவர் ஜி.சுப்புராஜ், செயலர் டி.பிரபாகரன், இணைச் செயலர் சி.செந்தில்வேலன், பொருளாளர் ஜி.செல்வராஜ் உள்ளிட்டோருக்கு சங்க முன்னாள் ஆளுநர் ஏ.வைரப்பிரகாசம் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். விழாவில், ஏழை மாணவருக்கு கல்வி உதவித்தொகை, முதியோர் இல்லத்துக்கு அரிசிப் பை, நோட்டுப் புத்தகம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

     மண்டல நிர்வாகி சந்திரசேகரன், அரிமா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி முதல்வர் அய்யாவு தங்கமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பொருளாளர் ஜி.சுரேஷ்கனி வரவேற்றார். செயலர் டி.பிரபாகரன் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai