சுடச்சுட

  

  திருப்பரங்குன்றம் கோயில் உண்டியல் வருமானம் ரூ.22.72 லட்சம்

  By திருப்பரங்குன்றம்  |   Published on : 24th June 2016 05:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியலில் ரூ.22 லட்சத்து, 72 ஆயிரத்து, 301 ரூபாய் வருமானமாக  கிடைத்தது.

  திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் உண்டியல் மாதம் ஒருமுறை திறந்து எண்ணப்படுவது வழக்கம். நடப்பு மாதத்திற்காண உண்டியல் வியாழக்கிழமை திறந்து எண்ணப்பட்டது. அதில் பணம் ரூ.22 லட்சத்து, 72 ஆயிரத்து, 301 ரூபாய், தங்கம் - 170 கிராம், வெள்ளி - 1 கிலோ 868 கிராம் வருமானமாக கிடைத்தது.

   கோயில் நிர்வாக அதிகாரி க.செல்லதுரை, கூடலழகர் திருக்கோயில் நிர்வாக அதிகாரி தி.அனிதா ஆகியோர் முன்னிலையில், அருள்மிகு ஆண்டவர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், ஸ்ரீ ஸ்கந்த குரு வித்யாலய மாணவர்கள் மற்றும்  திருக்கோயில் பணியாளர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai