சுடச்சுட

  

  நீரிழிவு நோயால் கண் பாதிப்பை தடுக்கும் கணினி மென்பொருள்: கலசலிங்கம் பல்கலை. டீன் வடிவமைப்பு

  By ஸ்ரீவில்லிபுத்தூர்  |   Published on : 24th June 2016 05:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நீரிழிவு நோயினால் ஏற்படும் கண் பாதிப்பை கண்டறிந்து தடுக்க உதவும் கணினி மென்பொருளை கலசலிங்கம் பல்கலைக்கழக டீன் வடிவமைத்துள்ளார்.

    மலேசியாவில் அண்மையில் 4 பல்கலைக் கழகங்கள் இணைந்து சர்வதேச ஆராய்சியாளர்கள் மாநாட்டை நடத்தின. இதில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் டீன் பிரதீப் கந்தசாமி, நீரிழிவு நோயால் ஏற்படும் கண் பாதிப்பை முன்பே கண்டுபிடித்து தடுக்க முடியும் என்பது குறித்த ஆராய்ச்சிக் கட்டுரையை சமர்ப்பித்து உரையாற்றினார். மேலும், அதற்கான புதிய கணினி மென்பொருளை வடிவமைத்து, அதனைப் பயன்படுத்தும் முறை குறித்தும் விளக்கினார். இம்மாநாட்டில் கலசலிங்கம் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் ஆறுமுகம், கலாவதி ஆகியோரும் ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.

   மாநாட்டிற்கு சென்று திரும்பிய பேராசிரியர்களை வியாழக்கிழமை பல்கலைக்கழகத்தின் வேந்தர் க.ஸ்ரீதரன், இயக்குநர் டாக்டர் எஸ்.சசி ஆனந்த், துணை வேந்தர் ச.சரவணசங்கர், பதிவாளர் வெ.வாசுதேவன் ஆகியோர் பாராட்டினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai