சுடச்சுட

  

  விருதுநகர் மற்றும் ஸ்ரீவில்லிபுத்துரைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் இருவர் காணாமல் போனதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    விருதுநகர் அய்யனார் நகரைச் சேர்ந்த கோமதி மகன் மாரிச்செல்வம் என்ற மனோ (14). இவர் விருதுநகரில் தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரது படிப்பு சம்பந்தமாக தாய் கோமதியை பள்ளி ஆசிரியர் அழைத்து வரச் சொன்னதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 21 ஆம் தேதி பள்ளியில் கட்டணம் செலுத்துவதற்காக வீட்டில் ரூ.2 ஆயிரம் வைத்திருந்தனராம். அதில், ரூ.500 ஐ எடுத்துக் கொண்டு மாரிச்செல்வம் சைக்கிளில் பள்ளிக்கு செல்வதாகக் கூறிச் சென்றபின் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, தாய் கோமதி அளித்த புகாரின் பேரில், விருதுநகர் மேற்கு போலீஸார் வழக்கு பதிந்து மாணவரைத் தேடி வருகின்றனர்.

  ஸ்ரீவில்லிபுத்தூர்:  ஸ்ரீவில்லிபுத்தூர் அத்திக்குளத்தைச் சேர்ந்த பேச்சியப்பன் மகன் அண்ணாமலை ராஜா (12). ஸ்ரீவில்லிபுத்தூரில் தனியார் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வரும் இவர், கடந்த சில நாள்களாக பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் புதன்கிழமை பெற்றோர் வேலைக்குச் சென்றுவிட்டு, மாலையில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது அண்ணாமலை ராஜாவைக் காணவில்லை. ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் இது குறித்து பேச்சியப்பன் புகார் அளித்தார்.

     போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai