சுடச்சுட

    

    பாண்டியன் கிராம வங்கிக்கு ரூ.65.86 கோடி நிகர லாபம்

    By விருதுநகர்  |   Published on : 24th June 2016 05:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடந்த 2015-16 ஆம் நிதி ஆண்டில் பாண்டியன் கிராம வங்கி ரூ.65.86 கோடி நிகர லாபம் அடைந்துள்ளதாக வங்கியின் (பொறுப்பு) தலைவர் சுகுமார் தெரிவித்தார்.

     விருதுநகரில் வியாழக்கிழமை நடைபெற்ற வங்கியின் நிதிநிலை அறிக்கை சம்பந்தமான நிர்வாகக்குழுக் கூட்டத்தில் அவர் தெரிவித்தது:

       கடந்த நிதியாண்டில் வங்கி ரூ.65.86 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. மேலும், வங்கியில் 13 ஆண்டுகளாக வராக் கடன்கள் ஏதும் இல்லை. கடந்த ஆண்டு வங்கியின் மொத்த வணிகம் ரூ.8,598.76 கோடியாகும். கடந்த ஆண்டு புதிதாக 27 வங்கிக் கிளைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து 16 மாவட்டங்களில் மொத்தம் 298 கிளைகள் உள்ளன. பிரதமரின் ஜன்-தன் திட்டத்தின் கீழ் 1,11,675 கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

      வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து நல்ல முறையில் சேவை வழங்க வேண்டும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai