சுடச்சுட

  

  பாதாள சாக்கடை இணைப்புக்கு அபராதம்: நகர்மன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு

  By விருதுநகர்  |   Published on : 24th June 2016 05:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விருதுநகர் நகராட்சியில் பாதாள சாக்கடை இணைப்பிற்கு அபராத கட்டணம் வசூலிக்க நகர்மன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    விருதுநகர் நகர்மன்றக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் நகர்மன்றத் தலைவர் சாந்தி தலைமை வகித்தார். ஆணையர் (பொறுப்பு) பழனிவேல், துணைத் தலைவர் மாரியப்பன், நகர்மன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

   கூட்ட விவாத விவரம்:

  கவுன்சிலர் ரமேஷ்: குடிநீரில் கழிவு நீர் கலந்து வருகிறது. இதனால், பொது மக்கள் அவதிப்படுகின்றனர். கழிவு நீர் வருவதை தடுக்க வேண்டுமென பலமுறை தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

  நகராட்சித் தலைவர்:  காசுக்கடை பஜார் மிகவும் குறுகலான பாதை, அதில் ஏராளமான வீட்டு குடிநீர் இணைப்புகள் உள்ளன. குடிநீர் குழாயில் சிறிய சேதம் ஏற்பட்டாலும் கழிவு நீர் பிரதான குழாயில் கலந்து விடுகிறது. நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

  கவுன்சிலர்கள் நாகேந்திரன், ஆரோக்கியராஜ்: பாதாள சாக்கடைத் திட்டத்திற்கு அபராதத் தொகை, வரைமுறைக் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக நகர் மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றாமல் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

  ஆணையர்: கடந்த நகர் மன்ற கூட்டத்தில் விவாதித்து எவ்வளவு தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதோ, அதன்படி நோட்டீஸ் வழங்கப்பட்டிருக்கும்.

  கவுன்சிலர் சுகுமார்ராஜன்: பாதாள சாக்கடை திட்டம் நிறைவடைந்ததும், கட்டணம் வசூல் செய்யப்பட்டிருந்தால், இப்போது பிரச்சனையாகி இருக்காது. பகுதி நேர துப்புரவு பணியாளர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பிற மாவட்டங்களில் கூடுதலாக சம்பளம் வழங்கப்படுகிறது.

  கவுன்சிலர் ஆறுமுகம்: அம்மா உணவகத்திற்கு மாதம் ரூ. 8 லட்சம் செலவு செய்யப்படுகிறது. இந்த நிதியை அரசிடம் கேட்டு பெற வேண்டும். மாதந்தோறும் நகராட்சி பணியாளர்களுக்கு சம்பளம் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  கவுன்சிலர் மகேஸ்வரி: மதுரா கோட்ஸ் காலனியில் சாலை வசதி ஏற்படுத்த வேண்டும். குப்பைகள் வாங்க துப்புரவு பணியாளர்கள் வருவதில்லை.

  ஜெயக்குமார்: நகராட்சியில் துப்புரவு பணிக்கு வெறும் 105 பேர் மட்டுமே உள்ளனர். எனவே, கூடுதலாக ஊழியர்களை நியமிக்க வேண்டும். ஊழியர்கள் இல்லாத காரணத்தால், வாறுகால்களில் மண் சேர்ந்து, கழிவு நீர் செல்வதில்லை.

  தனலெட்சுமி: எனது வார்டில் உள்ள அடிகுழாய் துருப்பிடித்து உடையும் நிலையில் உள்ளது. அதை மாற்ற வேண்டும். ஆயம்மாள் நகர் பகுதியில் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி பாதியில் நிற்கிறது. அதை தொடர வேண்டும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai