சுடச்சுட

    

    அருப்புக்கோட்டை அருகே உள்ள செம்பட்டியைச் சேர்ந்த சின்னான் என்பவரது மகன் செல்வம் (27). இவர் மின்மோட்டார் பழுது நீக்கும் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் வியாழக்கிழமை கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் மின் மோட்டார் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். எதிர்பாராவிதமாக அதிக அழுத்த மின்சாரம் உடலில் பாய்ந்ததில் செல்வம் மயங்கினார். உடனடியாக அவரை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

      ஆனால் அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிந்த தாலுகா காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai