சுடச்சுட

    

    ராஜபாளையம் அருகே வியாழக்கிழமை கார் கவிழ்ந்ததில், பள்ளி ஆசிரியர் உள்பட இருவர் உயிரிழந்தனர். மேலும், இருவர் பலத்த காயம் அடைந்தனர்.

     திருநெல்வேலி மாவட்டம் ராயகிரியைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் பால்சாமி (50). அதே ஊரைச் சேர்ந்தவர்களான டெய்லர் கனிராஜ் (60), ராமசாமி, ஜோதிபாசு ஆகிய 4 பேரும் விருதுநகரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர். மாலையில் அவர்கள் ராஜபாளையம் வழியாக காரில் ஊருக்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தனர். ராமசாமி காரை ஓட்டினார். தேவதானம் அரசு விதைப்பண்ணை அருகே சென்ற போது, கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயம் அடைந்த 4 பேரும் ராஜபாளையம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

     அங்கு பால்சாமி மற்றும் கனிராஜ் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். மற்ற இருவரும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சேத்தூர் போலீஸார் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai