சுடச்சுட

    

    வாங்கிய கடனை திருப்பிக் கேட்ட பெண் மீது தாக்குதல்

    By ராஜபாளையம்  |   Published on : 24th June 2016 05:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராஜபாளையத்தில் ஜவுளி வாங்கிய கடனைத் திருப்பிகேட்ட பெண் தாக்கப்பட்டது குறித்து போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

       ராஜபாளையத்தை சேர்ந்தவர் அமுதா (47). இவர் அப்பகுதியில் ஜவுளி வியாபாரம் செய்கிறார். இந்நிலையில், தென்றல் நகரைச் சேர்ந்த சாந்தி என்பவரின் தங்கை ஆறுமுகாவிற்கு அமுதா ரூ.6 ஆயிரம் கடனுக்கு ஜவுளி கொடுத்தாராம்.

      இந்தப் பணத்தை கேட்க புதன்கிழமை அமுதா தென்றல் நகர் சென்றுள்ளார்.

     அப்போது ஏற்பட்ட தகராறில் அமுதா தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகாரின் பேரில், ராஜபாளையம் வடக்கு காவல் நிலையப் போலீஸார், சாந்தி மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai