சுடச்சுட

    

    விருதுநகர் மாவட்டத்தில் சாலை விபத்துகள்: 5 மாதங்களில் 152 பேர் சாவு

    By விருதுநகர்  |   Published on : 24th June 2016 05:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை நடைபெற்ற பல்வேறு சாலை விபத்துகளில் 152 பேர் உயிரிழந்துள்ளனர்.

     விருதுநகர் மாவட்டம் வழியாக மதுரை-கன்னியாகுமரி, மதுரை-தூத்துக்குடி ஆகிய இரு 4 வழிச்சாலைகள் செல்கின்றன. மேலும், மாநில நெடுஞ்சாலைகள், கிராமச் சாலைகள், நகராட்சி சாலைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாலைகள் உள்ளன. இச்சாலைகளில் நடப்பு ஆண்டில் கடந்த ஜனவரி மாதம்  முதல் மே மாதம் வரை இரு சக்கர வாகனம் மற்றும்  பேருந்து, கனரக வாகனங்கள் விபத்துக்குள்ளானதில் 141 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், 152 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பல்வேறு வாகன விபத்துகளில் 250 பேர் படுகாயமடைந்துள்ளனர். 115 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai