சுடச்சுட

    

    திருத்தங்கலில் வெள்ளிக்கிழமை அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    திருத்தங்கல் அருள்மிகு ஸ்ரீ நின்ற நாராயணபெருமாள் கோயில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்காக கோயில் சார்பில் அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி உள்ளிட்டோர் பெயர் இல்லையாம். இதுகுறித்து வியாழக்கிழமை இரவு திருத்தங்கல் நகர்மன்ற உறுப்பினர்கள் சீனிவாசன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் மெட்ராஸ்குமார் ஆகிய மூவரும் கோயில் செயல் அலுவவர் இரா.முருகனிடம்  தகராறு செய்து தாக்கினார்களாம்.

    செயல் அலுவலரை தாக்கியவர்களைக் கைது செய்யக்கோரி அரசு ஊழியர்கள் திருத்தங்கல் நின்ற பெருமாள் கோயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க சிவகாசி கிளைத் தலைவர் வைரவன் தலைமை வகித்தார். இதில் 6 பெண்கள் உள்பட 80 அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai