சுடச்சுட

  

  கட்டுமான பணியின் போது உயிரிழப்போர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு

  By விருதுநகர்  |   Published on : 25th June 2016 06:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தோர் கட்டுமானப் பணியின் போது உயிரிழந்தால் அவரது குடும்பத்தாருக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட வருவாய் அலுவலர் சி. முத்துக்குமரன் தெரிவித்துள்ளார்.

   அவரது செய்தி குறிப்பு: தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக சேர்ந்தவர்களின் குழந்தைகளுக்கு நல வாரியம் மூலம் கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, மகப்பேறு உதவித் தொகை, ஓய்வூதியம், இயற்கை மற்றும் விபத்து மரண உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், பணியின் போது விபத்து காரணமாக உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு ரூ. ஒரு லட்சம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது அந்த இழப்பீட்டு தொகை ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், விருதுநகர் மாவட்டத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்தகாரர்கள், வெளி மாநிலத்திலிருந்து அழைத்து வந்துள்ள தொழிலாளர்களை, தொழிலாளர் ஆய்வாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai