Enable Javscript for better performance
குப்பைத் தொட்டிகளை சரிசெய்யக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    குப்பைத் தொட்டிகளை சரிசெய்யக் கோரிக்கை

    By அருப்புக்கோட்டை  |   Published on : 25th June 2016 06:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அருப்புக்கோட்டை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இதில் பல இடங்களிலுள்ள குப்பைத் தொட்டிகள் மிகவும் சேதமடைந்துள்ளன. இருப்பினும் இக்குப்பைத் தொட்டிகளை பயன்பாட்டுக்கு வைப்பதால் லாரி மூலம் தொட்டிகளை ஏற்றிச் செல்லும்போது வழியெங்கும் சிதறுகின்றன.

    அழுகிய காய்கறிகள், மீதமான உணவுகளையும் போடுவதால் அவையும் சிதறி துர்நாற்றத்தை ஏற்படுத்துகின்றன. குப்பைகளைக் கொண்டு செல்லும் லாரிகளை வலை மூலம் மூடுவதும் இல்லை. சேதமடைந்த குப்பைத்தொட்டிகளைப் பயன்படுத்துவதால் அது மேலும் சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே குப்பைத் தொட்டிகளை சரிசெய்து பயன்படுத்த வேண்டும் என நகர் பொதுநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai