சுடச்சுட

  

  ஊரக வளரச்சித்துறை மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம்(சி.ஐ.டி.யூ) சார்பில் சிவகாசி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  சுகாதாரப் பணியாளர்களுக்கு நேரு காலனியில் ரூ.1.25 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள வீடுகளை பயனாளிகளிடம் ஒப்படைக்க வேண்டும். வேலைக்கு புதிதாக கருவிகள் வாங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

      நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அந்த அமைப்பின் சிவகாசி தலைவர் பி.பால்ராஜா தலைமை வகித்தார். ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலர் க.சமுத்திரம், நிர்வாகி எம்.முனியப்பன், நகர செயலர் ஆர்.ஜீவா, உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்க மாவட்ட செயலர் எஸ்.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பேசினார்கள். எஸ்.சங்கர் நன்றி கூறினார்.

  முற்றுகை: சிவகாசி நகராட்சிப் பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வீடுகளில் கழிப்பறை கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 30-ஆவது வார்டில் பி.கே.எஸ். தெருவில் சில வீடுகளில் இருந்த கழிவு வெளியேறும் குழாய்களை நகராட்சி ஊழஇயர்கள் சேதப்படுத்தினராம்.

  இதையடுத்து பி.கே.எஸ்.தெரு, நாவெட்டிநாடார் தெரு, மொ.சி.தெரு, நா.சி.தெரு, புக்கான் தெரு, ஜவுளிக்கடைத் தெரு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 100 பேர் வெள்ளிக்கிழமை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

  வீடுகளில் இடம் இல்லாததால், கழிப்பறை கட்டுவதற்கு மாற்று திட்டம் உருவாக்குமாறு நகராட்சி ஆணையர் ராஜன், பொறியாளர் ரவீந்திரன் ஆகியோரிடம் மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai