சுடச்சுட

  

  டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராட்ட அறிவிப்பு: வஜ்ரா வாகனத்துடன் போலீஸார் பாதுகாப்பு

  By ராஜபாளையம்  |   Published on : 25th June 2016 05:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராஜபாளையம் அருகே குடியிருப்புக்கு மத்தியில் இயங்கும் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்த முயன்றவர்களை காவல் துறையினர் விரட்டி அடித்தனர். கடைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

   ராஜபாளையம் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தில் குடியிருப்புகள் மற்றும் கடைகள் அதிகம் உள்ள பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளப். இங்கு பார் வசதி இல்லாததால் மது குடிப்போர் சாலை ஓரம் மற்றும் வீடுகளின் வாசலில் வைத்து மது அருந்துவதாக கிருஷ்ணாபுரம் பொது மக்கள் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இக் கடையை இடம் மாற்றம் செய்யக் கோரி வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தனர்.

   சில நாள்களுக்கு முன்னர் தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகளை மூட அரசு உத்தரவிட்டது. ஆனால் அதில் இக்கடை மூடப்படவில்லை. மேலும் கடையின் அருகே பார் நடத்தவும் ஏற்பாடுகள் நடப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அப்பகுதி பொதுமக்கள் அறிவித்தனர்.

   இந்த அறிவிப்பை தொடர்ந்து காலை 9 மணி முதலே டாஸ்மாக் கடையை சுற்றி இரும்பு தடுப்புகள் கொண்டு பாதுகாப்பு வளையம் அமைத்து சுமார் 50க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். தண்ணீர் பீய்ச்சியடித்து கூட்டத்தைக் கலைக்கும் வஜ்ரா வாகனமும் வரவழைக்கப் பட்டிருந்தது.பகல் 12 மணிக்கு கடை திறந்ததும், ஆங்காங்கே நின்றிருந்த பெண்கள் மற்றும் பொது மக்கள் ஒன்று திரண்டு போராட்டத்துக்குச் செல்ல முயன்றனர். போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி கலைந்து போகக் கூறினர். மறுத்தால் கைது செய்து 15 நாள் காவலில் வைப்போம் எனவும் எச்சரித்தனர். தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் டாஸ்மாக் கடை வழக்கம் போல இயங்கியது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai