Enable Javscript for better performance
தற்கொலை செய்த ஆசிரியர் உடல் தகனம்: 12 பேர் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    தற்கொலை செய்த ஆசிரியர் உடல் தகனம்: 12 பேர் மீது வழக்கு

    By விருதுநகர்  |   Published on : 25th June 2016 06:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மல்லாங்கிணறு அருகே நாகம்பட்டியில் தற்கொலை செய்து கொண்ட ஓவிய ஆசிரியரின் உடலை போலீஸாருக்கு தெரியாமல் எரித்த 12 பேர் மீது போலீஸார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

    மல்லாங்கிணறு அருகே உள்ள நாகம்பட்டியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன்(47). இவர், திருத்தங்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக இருந்தார். இந்நிலையில் இவர், புதன்கிழமை இரவு வீட்டில் தற்கோலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

      இதையடுத்து, இவரது உறவினர்கள் ஜெயச்சந்திரனை வியாழக்கிழமை மயானத்தில் வைத்து எரித்து விட்டனர். இவர் இறப்பு குறித்த தகவலை போலீஸாரு க்கு தெரியப்படுத்த வில்லையாம்.

    இது குறித்து வரலொட்டி கிராம நிர்வாக அலுவலர் (பொறுப்பு) ரஞ்சித்குமார் மல்லாங்கிணறு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன் பேரில், ஜெயச்சந்திரனின் சகோதரர் சுரேஷ், உறவினர்கள் சீனிவாசன், சுந்தர்ராஜ், நாகிரெட்டி, ராமச்சந்திரன், நாராயணசாமி, பாண்டியராஜ், அழகர்சாமி, ராமச்சந்திரரெட்டி உள்பட 12 பேர் மீது மல்லாங்கிணறு போலீஸார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai