சுடச்சுட

  

  திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயணப் பெருமாள் கோயில் தேரோட்டம்

  By சிவகாசி  |   Published on : 25th June 2016 06:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருத்தங்கல் அருள்மிகு ஸ்ரீ நின்ற நாராயணப்பெருமாள் கோயில் ஆனி பிரம்மோத்ஸவ தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

  108 வைணவ திவ்ய தேசங்களுக்குள் ஒன்றான திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோயிலில் ஆனி பிரம்மோத்ஸவ திருவிழா ஜூன் 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

  தினசரி இரவு சுவாமி வீதி உலா நடைபெற்றது.

  தொடந்து வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. தேரில் ஸ்ரீ செங்கமலத்தாயார் மற்றும் ஸ்ரீநின்ற நாராயணபெருமாள் எழுந்தருளினர். தேரோட்டத்தை ஊரகத்தொழில் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வடம் பிடித்து தொடக்கி வைத்தார். தேரின் முன்பு பெண்கள் கோலாட்டம் ஆடிச் சென்றனர். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமரன், கோயில் செயல் அலுவலர் இரா.முருகன், திருத்தங்கல் நகர்மன்றத் தலைவி லட்சுமி கணேசன், துணைத் தலைவர் பொன்சக்திவேல் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai