சுடச்சுட

  

  மதுக்கூட ஏல பிரச்னையில் ஒருவருக்கு வெட்டு

  By ஸ்ரீவில்லிபுத்தூர்  |   Published on : 25th June 2016 06:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஸ்ரீவில்லிபுத்தூரில் மதுக்கூட ஏல முன்விரோதத்தில் ஒருவரை அரிவாளால் வெட்டிய இருவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

  ஸ்ரீவில்லிபுத்தூர், முதலியார்பட்டி தெருவைச் சேர்ந்த பேச்சிமுத்து மகன் ராமசாமி (49). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள டாஸ்மாக் கடையின் பாரை ஏலம் எடுத்து நடத்தி வருகிறார்.

  இதே கடையை இதற்கு முன்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் அசோக்நகரைச் சேர்ந்த விநாயகம் நடத்தி வந்தாராம். இதில் இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை ராமசாமியின் வீட்டிற்கு விநாயகமும், இடையபொட்டல் தெருவைச் சேர்ந்த கோபி மகன் சக்தி என்பவரும் சென்றுள்ளனர்.

  அப்போது ராமசாமிக்கும் விநாயகத்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராமசாமியை விநாயகம் வெட்டினாராம்.

    காயமடைந்த ராமசாமி ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ராமசாமி புகாரின் பேரில், விநாயகம், சக்தி ஆகியோர் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

  ராமசாமியுடன் பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த அடையாளம் தெரியாத இருவர் தன்னை அரிவாளால் வெட்டியதாக விநாயகம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அவரது புகாரின் பேரிலும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai