சுடச்சுட

    

    விருதுநகரில் பாலம் அருகே குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

    By விருதுநகர்  |   Published on : 25th June 2016 05:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகர்-சிவகாசி பாலம் அருகே குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர், அணுகு சாலையில் தேங்கி யுள்ளது. குழாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    விருதுநகர் நகராட்சி பகுதியில் சுமார் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தாமிரவருணி கூட்டு குடிநீர் திட்டம், ஆனைக்குட்டம் நீர்தேக்கத்திலிருந்து 10 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படுகிறது. இதே நிலை தான் விருதுநகரின் மேற்கு பகுதியில் உள்ள ரோசல்பட்டி ஊராட்சியிலும் உள்ளது.

    விருதுநகர் நகராட்சி பகுதிகள் மற்றும் ரோசல்பட்டி ஊராட்சியில் உள்ள பாண்டியன் நகர் பகுதிக்கு ஆனைக் குட்டத்திலிருந்து குடிநீர் குழாய்கள் மூலம் கொண்டு வரப்படுகிறது. விருதுநகர்- சிவகாசி பாலம் அருகே நகராட்சிக்கு செல்லும் கூட்டுக் குடிநீர் குழாய் மற்றும் பாண்டியன் நகருக்கு செல்ல கூடிய குழாய்கள் உள்ளன. பாலம் அமைக்கும் போது இந்தக் குழாய்களை முறையாக பதிக்கவில்லை என கூறப்படுகிறது.

    இதன் காரணமாக அடுத்தடுத்து கனரக வாகனங்கள் செல்லும் போது குழாய்கள் உடைந்து விடுகின்றன.

    இரு திட்ட குழாய்கள் செல்வதால் எந்தக் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிய முடியாமல் இரு நிர்வாகங்களும் திணறுகின்றன. அதற்குள் குடிநீர் வெள்ளம் போல் தேங்கி வீணாகிறது. எனவே குழாய்களின் உடைப்பைச் சீரமைத்து, மீண்டும் உடையாத விதத்தில் நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai