சுடச்சுட

  

  விருதுநகர் மாவட்டத்தில் குடிநீர் மாதிரிகள் பரிசோதனை

  By விருதுநகர்  |   Published on : 25th June 2016 06:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விருதுநகர் மாவட்டத்தில் குடிநீர் மற்றும் சுகாதார விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு குடிநீர் ஆதாரங்களின் தன்மை குறித்து அலுவலர்கள் பரிசோதனை செய்ய உள்ளனர்.

  குடிநீர் மற்றும் சுகாதார விழிப்புணர்வு வாரம் வரும் 27-முதல் ஜூலை 3 வரை கொண்டாடப்பட உள்ளது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமரன் தலைமையில் விருதுநகரில் நடைபெற்றது.

  குடிநீரில் காரத்தன்மை, கடினத்தன்மை, குளோரைடு, இரும்பு, அம்மோனியம் நைட்ரேட், குளோரின் உள்ளிட்டவைகளின் அளவு குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் இந்த விழிப்புணர்வு வாரத்தின் போது ஆய்வு செய்வர். அனுமதிக்கப்பட்ட அளவை விட உப்பு அளவு அதிகம் இருந்தால் அந்த நீர் குடிப்பதற்கு ஏற்றதல்ல என அறிவிக்கப்படும்.

  விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு நகராட்சிப் பகுதிகளில் 2,071, பேரூராட்சி பகுதிகளில் 1,721, மற்றும் ஊரகப் பகுதிகளில் 12,925 என மொத்தம் 16,717 குடிநீர் ஆதாரங்களிலிருந்து நீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் பரிசோதனை செய்தனர். அவற்றில் 227 இடங்களில் சேகரிக்கப்பட்ட குடிநீர் உப்பு தன்மை அதிகம் இருந்ததால் குடிப்பதற்கு தகுதியானது இல்லை என அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டும் அதேபோல் குடிநீர் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட உள்ளன.  ஆலோசனைக் கூட்டத்தில்,  தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் ஈ.பழனியப்பன், நிர்வாக பொறியாளர்கள் எட்வர்டு அமல்ராஜ், ஜகுபார், கோட்டியப்பன், மருத்துவ பணிகள் துணை இயக்குநர் பழனிச்சாமி, ஊராட்சிகள் உதவி இயக்குநர் பீபிஜான் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai