சுடச்சுட

  

  விருதுநகர் மாவட்ட ரேஷன் கடைகளில் விரைவில் "ஸ்மார்ட் கார்டு'

  By விருதுநகர்  |   Published on : 25th June 2016 06:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நியாய விலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மை செயலர் சூ. கோபால கிருஷ்ணன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

  விருதுநகர் மாவட்டத்தில் பொதுவிநியோக திட்டத்தின் கீழ் செயல்படும் 997 நியாய விலைக்கடைகள் கணினி மயமாக்கப்பட்டுள்ளது. இதில், 5.66 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.

  இந்நிலையில், பொது விநியோகத்திட்டத்தின் கீழ் செயல்படும் காரியாபட்டி கிட்டங்கி, தோணுகால் நியாய விலைக்கடை, கல்குறிச்சி நியாய விலைக்கடை, அருப்புக்கோட்டை கிட்டங்கி, பாலவநத்தம் நியாய விலைக்கடை, சத்திர ரெட்டியபட்டி நியாயவிலைக்கடை, விருதுநகர் கிட்டங்கி போன்ற இடங்களை உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மை செயலர் சூ. கோபாலகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை பார்வையிட்டார். நியாய விலைக்கடைகளில் குடும்ப அட்டைதாரர்களின் விவரம் மற்றும் செல்லிடப்பேசி எண், ஆதார் அட்டை முதலான விவரங்கள் விற்பனை இயந்திரத்தில் பதிவேற்றம் செய்யப்படுள்ளதா என்பதை ஆய்வு செய்தார்.

  பின்னர் அவர் கூறியதாவது: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களின் விவரம், செல்லிடப்பேசி எண், மற்றும் ஆதார் அட்டை விபரங்கள் ஆகியவை ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்காக பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. இனிவரும் காலங்களில் நியாய விலைக்கடைகளில் பொருட்கள் வாங்கினால் வாங்கிய பொருள்களின் விவரம் மற்றும் அத்திவாசிய பொருட்களின் இருப்பு விவரம் குடும்ப அட்டைதாரர்களின் செல்லிடபேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். இதன் மூலம் சுமார் 20 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுவர். இதுவரை 5.56 லட்சம் குடும்ப அட்டைதாரர்களின் விவரங்கள் இயந்திரத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai